Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது ரூ.971 கோடியில் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

பல்வேறு சிறப்பு வசதிகளுடன் ரூ.971 கோடியில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமையும் என்று பிரதமர் தெரிவித்தார்.

டெல்லியில் தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம், மிகப் பழமையானது. விரைவில் நூற்றாண்டு காணும் இந்த கட்டிடம், நமது நாட் டின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பாரம்பரியமிக்க பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே, புதிய நாடாளு மன்றம் கட்டிடம் கட்டும் திட்டத்தை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘விசாரணை முடியும்வரை புதிய கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது. அப்பகுதியில் உள்ள மரங் களையும் வெட்டக் கூடாது’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத் தரவுகள் பின்பற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக் கப்பட்டது. இதைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவை நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தாக அமைய உள்ளது.

நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரசியல் சட்ட அரங் கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக் களின் அறைகள், உணவு அருந்தும் இடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் போது, மக்களவையில் 1,224 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளன. எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் கட்டிடம் அமைக்கப்படுகிறது.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ள இந்த நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க நாளா கும். நாட்டின் ஜனநாயக பாரம்பரி யத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய கட்டிடம் அமையும்.

புதிய இந்தியாவின் அடையாளம் தான் இந்த நாடாளுமன்ற கட்டிடம். தற்போது செயல்பட்டு வரும் பழைய கட்டிடம் நூற்றாண்டு பழமையானது. பலமுறை புதுப்பிக்கப்பட்டுவிட்டது. பழமையும் புதுமையும் இணைந்ததாக நாடாளுமன்ற கட்டிடம் அமையும்.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருப்பதைவிட அழகான, புனித மான விஷயம் எதுவாக இருக்க முடியும்?

‘சோழர் கால ஆட்சியே சான்று’

இந்தியாவில் ஜனநாயக நடைமுறைகள் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்தன என்பதற்கு தமிழகத்தில் நடந்த சோழர் கால ஆட்சியே சிறந்த சான்றாக அமைந்துள்ளது. 9, 10-ம் நூற்றாண்டுகளில் சிறந்து விளங்கிய சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தேர் தல் நடைமுறை இருந்தது. மக்களே தகுதியான பிரதிநிதிகளை தேர்ந் தெடுத்தனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற விதி அப் போதே இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டி ருந்தது. இது தொடர்பான விவரங்கள் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

நாட்டின் வளர்ச்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிர அக்கறை கொண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அர சியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

முதல்வர் பழனிசாமி வாழ்த்து

பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், ‘சுதந்திர இந்தியாவில் இந்த கட்டிடத்தின் வடிவமைப்பு பிரத்யேக அடையாளமாக இருக்கும் என்று நம்புகிறேன். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x