Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

மதமாற்ற தடை சட்டம்உ.பி.யில் இளைஞர் மீதுமுதல் வழக்கு பதிவு

பரேலி

உத்தரபிரதேசத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தின் கீழ், இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணம் செய்வதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது என கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைசுட்டிக்காட்டி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, மதமாற்ற தடை அவசர சட்டத்தை அரசு அண்மையில் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி, எந்தவொரு தனி நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொருவரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல், திருமணம் என்ற பெயரிலும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது. இதனை மீறி, சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ளதேவ்ரானியன் பகுதியைச் சேர்ந்த உவைஷ் அகமது (30) என்ற இளைஞர்மீது நேற்று அளிக்கப்பட்ட புகார் ஒன்றில், திருமணமான எனது மகளைமதம் மாறுமாறு கூறி உவைஷ் அகமது மிரட்டல் விடுப்பதாகவும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x