Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

சென்னையில் புதிய நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் ரூ.67,378 கோடி திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார் தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு சார்பில் நேற்று மாலை நடந்த விழாவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் உட்பட ரூ.67,378 கோடியிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அருகில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர்.படம்: க.பரத்

சென்னை

சென்னையின் குடிநீர்த் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய நீர்த் தேக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அத்துடன் தமிழக அரசு சார்பில் ரூ.67,378 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, ‘தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற் றுப் புள்ளி வைக்கப்படும்’ என்றார்.


தமிழக அரசு சார்பில் புதிய திட்டங் களுக்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று மாலை 4.45 மணிக்கு நடந்தது. விழாவுக்கு முதல்வர் பழனிசாமி தலைமை வகித் தார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்க்கண்டிகையில் தமிழக அரசின் சார்பில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை காணொலி காட்சி மூலம் மக்கள் பயன் பாட்டுக்கு அமித்ஷா அர்ப்பணித்தார்.

அதைத் தொடர்ந்து ரூ.61,843 கோடி யில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள், கோவை - அவினாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை, கரூர் மாவட்டம் நஞ்சைபுகலூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, ரூ.309 கோடி மதிப்பில் சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பிலான பெட்ரோலிய முனையம், ஆமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பில் லூப் பிளான்ட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூ.900 கோடியில் புதிய இறங்குதளம் என மொத்தம் ரூ.67,378 கோடியிலான திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

தொன்மையான மொழியாம் தமிழில் பேச முடியாததற்காக வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் மகத்தான பங் களித்த தமிழர்களுக்கு தலைவணங்கு கிறேன். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நடக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது. ஜெயலலிதா வழி காட்டுதலின்படி நடக்கும் இந்த ஆட்சி தொடரும். சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக் கும் கரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடியை வளர்ந்த நாடுகளைவிட மோடி அரசு சிறப்பாக கையாண்டது. கரோனா நெருக்கடியை தமிழகம் சிறப்பாக கையாண்டதற்காக முதல்வர், துணை முதல்வரை பாராட்டுகிறேன். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மிகச்சரியாக துல்லியமான தரவுகளை தமிழக அதிகாரிகள் அளிக் கிறார்கள். கரோனாவை சிறப்பாக கையாண்டும் வருகிறார்கள்.

கரோனா காலத்தில் கர்ப்பிணிகள், சிசுக்கள் பராமரிப்பில் தமிழகம் முன் னிலையில் உள்ளது. நல்லாட்சி, நீர் பாது காப்பு, நீர் விநியோகத்தில் இந்த ஆண்டு தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்து வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 15 சதவீத ஏழைகளுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கவில்லை. 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை களுக்கும் தூய்மையான குடிநீர் வழங் கப்படும். 2022-ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீட்டுவசதி அளிக்கப்படும்.

மோடி அரசு தமிழகத்துக்கு அநீதி இழைத்து வருவதாக திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் பேசி வருகின்றனர். 10 ஆண்டுகால காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைத்த நன்மைகளை அவர்களால் பட்டியலிட முடியுமா என்று சவால் விடுக்கிறேன். எங்கள் ஆட்சியில் கிடைத்த நன்மைகளை பட்டியலிட தயாராக இருக்கிறேன். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஏழைகள் நலன் ஆகியவற்றில் அதிமுக அரசுக்கு மோடி அரசு உறுதுணையாக இருக்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென் னைக்கு வந்துள்ளதால் சற்று அரசியல் பேச விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன். ஊழல், வாரிசு அரசியல், சாதி அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக மோடி அரசு போராடி வெற்றியும் கண்டுள்ளது. இந்திய மக்கள் குடும்ப அரசியலுக்கு எதிராக சரி யான பாடம் புகட்டி வருகின்றனர். அதே பாடத்தை தமிழக மக்களும் புகட்டுவார் கள். குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டு வோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் ஊழலுக்கு எதிராக பேசுவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. 2ஜி ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களை செய்தவர்களுக்கு ஊழல் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை.

மோடி ஆட்சியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி இருக்கிறார்கள். இலங்கை யில் போரினால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பில் யாழ்ப்பாணத்தில் இலவசமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகித் தார். தலைமைச் செயலாளர் கே.சண் முகம் வரவேற்புரையாற்றினார். விழா முடிவில் தொழில் துறை செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அமைச்சர்கள், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று பகல் 1.40 மணிக்கு சென்னை வந்த அமித் ஷாவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அமித் ஷாவுடன் ஆலோசனை

கலைவாணர் அரங்க நிகழ்ச்சி முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, கூட்டணி தொடர்பாகவும், பாஜக கேட்கும் இடங் கள் குறித்தும் ஒரு மணி நேரம் விவாதித் துள்ளனர். அடுத்தகட்டமாக, பாஜக தேசிய தலைமையில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் விரைவில் தமிழகம் வந்து பேசி கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x