Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவ.9-ல் கருத்துகேட்பு கூட்டம் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெற்றோர் பங்கேற்க அரசு அழைப்பு

பள்ளிகள் திறப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அனைத்து பள்ளி களிலும் நவ.9-ம் தேதி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பர வலால் நடப்பு ஆண்டு பள்ளி, கல் லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து கல்வித் தொலைக் காட்சி மற்றும் இணையவழியில் தற்போது மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி களை நவ.16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதேநேரம் வடகிழக்கு பருவமழைக் காலம் மற்றும் கரோனா 2-வது அலை பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல் வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர், ஆசிரியர் களின் கருத்துகள் கேட்கப்பட உள்ள தாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று வெளி யிட்ட செய்திகுறிப்பு:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் மாணவர்களின் நலனை கருத் தில்கொண்டு பொதுத்தேர்வு நடக்கும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை அளித்து பள்ளிகளை விரைவில் திறக்க பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதுதவிர பள்ளிகளை அக்.15-ம் தேதிக்கு பிறகு சூழலின் தீவிரம் கருதி திறந்து கொள்ளலாம் என்று மத் திய அரசும் கடந்த செப். 30-ல் அறி வித்தது. இதையடுத்து வருவாய் மற் றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் நவ.16-ம் தேதி முதல் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் என தொடர்ந்து பண்டிகை விடுமுறைகள் வருகின்றன. அதேபோல், கல்வித் தொலைக்காட்சி அல்லது இணையவழியில் மாணவர் கள் பாடங்களை முழுமையாக படிக்க முடியாது.

வகுப்பறையில் ஆசிரியர்கள் நேரடி கற்பித்தல் முறையில்தான் மாணவர் கள் எளிதாக பாடங்களை புரிந்து படிக்கவும், தேர்வை எதிர்கொள்ளவும் ஏதுவாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடிப் படையில் பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த விவகாரம் குறித்து சில கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்துகேட்புக் கூட்டம் நவ.9-ம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நடக்கவுள்ள இந்த கூட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கூட்டத் தில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x