Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM

சென்னையில் உள்ள அரசு மையத்தில் - குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் : தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு

குடிமைப் பணி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு பயிற்சி மையத்தில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற இன்று முதல் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச் செயலர் இறையன்பு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் அகில இந்தியகுடிமைப் பணிகள் தேர்வு பயிற்சிமையம் கடந்த 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தமையம் தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

இந்த பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவுவழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மாணவர்கள் இங்கு கட்டணமின்றி உணவு அருந்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரி தேர்வுகளும்நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்ஊக்கத் தொகை வழங்கப்படும்.

தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் முதன்மைதேர்வுக்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில் இந்த ஆண்டு 225 பேர் தங்கிப் பயில வசதிகள் உள்ளன.

இதில் சேர விரும்பும் தேர்வர்கள் நவ.3 (இன்று) மாலை 6 மணிமுதல் 7-ம் தேதி மாலை 6 மணி வரை www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பதிவு செய்பவர்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளபடி, வருமானச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததற்கான இணைய ரசீதை இணைக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த சான்றிதழை பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் நவ.9-ம் தேதி மாலை 6மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும். 10-ம் தேதி சேர்க்கை நடைபெறும். 11-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x