Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

மேஷம்: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்

மேஷம்: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.ரிஷபம்: கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் ஏற்படும். உங்களின் அணுகுமுறையை மாற்றுவது நல்லது.மிதுனம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தாய்வழியில் ஆதரவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.கடகம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடனைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள்.சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். சகோதர, சகோதரிகளால் உதவி கிடைக்கும்.கன்னி: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.துலாம்: புது முயற்சிகள் வெற்றியடையும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். விருந்தினர் வருகை யால் வீடு களைகட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். திடீர் பயணம் ஏற்படும்.தனுசு: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். கலைப்பொருட்கள் சேரும்.மகரம்: கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும்.கும்பம்: குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். மீனம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x