Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான : கட்-ஆஃப் வெளியீடு :

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்சேர்க்கை தலைவர் முஜாகித் உல் இஸ்லாம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 5 ஆண்டு பிஏ.எல்எல்பி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் வருமாறு: ஓ.சி. - 92.052, பிசி - 88.395, பிசி (முஸ்லிம்) - 87.500, எம்பிசி (வன்னியர்) - 86.445, எம்பிசி, டிஎன்சி - 88.175, எம்பிசி - 88.000, எஸ்சி - 86.810, எஸ்சி (அருந்ததியர்) - 84.482, எஸ்டி - 81.662.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் இன்று (செப்.30) முதல் அக்.4 வரை நடைபெறும். ஆன்லைன் கலந்தாய்வு அக்.6, 7-ல் நடக்கவுள்ளது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x