Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

கிரிக்கெட் வீரர் தோனி - நடிகர் விஜய் திடீர் சந்திப்பு : சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகம்

விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்த பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும்‘பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்புஜார்ஜியாவில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வரு கின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார். அவரது படப்பிடிப்பு தளத்துக்கு அருகே விஜய்யின் ‘பீஸ்ட்’திரைப்பட படப்பிடிப்பு நடந்துள்ளது. இதை அறிந்த தோனி உடனடியாக விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரது ரசிகர்களும் இதைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், கிரிக்கெட் உலகின் ‘தல’, தமிழ் சினிமாவின் ‘தளபதி’ என இணைத்து ‘தல - தளபதி சந்திப்பு’ என குறிப்பிட்டு புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x