Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் தவறு செய்த நடத்துநர் இடைநீக்கம் - பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஆண்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று கூறியிருப்பதாவது:

திமுக தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டபடி, மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டு இதுவரை 6.53 கோடிபெண்கள் பயணித்துள்ளனர். தினமும் 30 லட்சம் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கின்றனர். 40 சதவீதம் எதிர்பார்த்த நிலையில், தற்போது மகளிர் பயணஅளவு 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்காக அரசு ரூ.1,200 கோடி வழங்கியுள்ளது.

இந்நிலையில், பேருந்துகளில் ரூ.5-க்கு பதில் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முழு விவரம் அறியாமல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ரூ.5 மற்றும் ரூ.10கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் செய்யப்படவில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இழப்பை ஈடுசெய்வதற்காக எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை. அவரது குற்றச்சாட்டு தவறானது.

தமிழகத்தில் தற்போது 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது ரூ.39 ஆயிரம் கோடி இழப்பில் உள்ள துறையை சிறப்பாக செயல்படச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நற்பெயரைக் கெடுக்கவே ஓபிஎஸ் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர்இடத்தில் நடத்துநர் தவறு செய்ததுகண்டறியப்பட்டு, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்டஓர் இடத்தில் தவறு நடப்பதைகவனத்துக்கு கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களில் விமான நிலையம் அமைப்பதைப் பொருத்தவரை, உச்சிப்புளி, ஓசூர் போன்ற இடங்களில் கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதல்வருடன் பேசி மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராபொருத்தும் பணி நடக்கிறது. இதுநவம்பரில் நிறைவடையும். மின்பேருந்துகளை பொருத்தவரை, அனைத்தும் அரசுடையதாக இருக்கும். முதலில் 100 பேருந்துகள்வாங்கப்பட்டு அதற்கான மின்னேற்ற கட்டமைப்புகளை உருவாக்கி, அதற்குப் பிறகு நகரப் பகுதிகளில் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x