Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

 சிவப்பு மட்டுமே தக்காளியின் நிறமல்ல

 சிவப்பு மட்டுமே தக்காளியின் நிறமல்ல. மஞ்சள், ஊதா, வெள்ளை என பல நிறங்களில் தக்காளிகள் உள்ளன.

 தக்காளிகள் முதலில் பெரு நாட்டில் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் உள்ளன.

 தக்காளியின் எடையில் 94.5 சதவீதம் தண்ணீராகும்.

 பைபிளில் தக்காளியைப் பற்றி குறிப்பிடப்படாததால், ஆரம்பத்தில் இதை சமையலுக்கு பயன்படுத்த ஐரோப்பியர்கள் அஞ்சியுள்ளனர்.

 தக்காளிகளை அதிக அளவில் விளைவிக்கும் நாடான சீனா, கடந்த 2010-ம் ஆண்டில் 41.8 மில்லியன் டன் தக்காளிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

 உலகின் மிகப்பெரிய தக்காளி, 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் விளைந்தது. இதன் எடை 3.5 கிலோ.

 ஒரு தக்காளியில் சராசரியாக 22 கலோரி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 2019-20-ல் இந்தியாவில் 20 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

 இந்தியாவில் தக்காளியை அதிகம் விளைவிக்கும் மாநிலமாக ஆந்திரா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x