Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

பிப்ரவரி மாதத்தில் கடந்த ஆண்டை விட பதிவுத் துறை வருவாய் 42 சதவீதம் அதிகரிப்பு அதிகபட்சமாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 761 பத்திரங்கள் பதிவு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைவிட இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பத்திரப்பதிவுத்துறையின் வருவாய் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழக பதிவுத்துறை முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு முதல் இணையதள வழி பத்திரப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எளிய முறையில் பத்திரங்கள் இணையதளம்வாயிலாகவே தயாரிக்கப்படுவதாலும், தினசரி பதியப்படும் பத்திரங்கள் அன்றே பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டை ஒப்பு நோக்கும் போது, இந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இதுகுறித்து பதிவுத் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 3 லட்சத்து 8 ஆயிரத்து 761 பத்திரங்கள் பதியப்பட்டுள்ளன. கடந்தாண்டு இது 2 லட்சத்து 34ஆயிரத்து 11 ஆக இருந்தது. அதன் மூலம் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கிடைத்த ரூ.976 கோடியே98 லட்சத்தை விட 41.91 சதவீதம்வருவாய் அதிகரித்து ரூ.1,386கோடியே 59 லட்சம் கிடைத்துள்ளது.

கரோனா தாக்குதலுக்குப்பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பத்திரப்பதிவு வருவாய் முந்தைய நிதியாண்டை காட்டிலும் அதிகரிக்கத் தொடங்கியது. அவ்வாறு அதிகரித்த வருவாயின் அளவு பிப்ரவரி மாதத்தில் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், கடந்த 2019-20-ம் நிதியாண்டில் ஏப்.2019 முதல் பிப். 2020 வரை 23 லட்சத்து 72 ஆயிரத்து 861 பத்திரங்கள் பதியப்பட்டு அதன் மூலம் ரூ.10ஆயிரத்து 122 கோடியே 4 லட்சம்வருவாய் கிடைத்தது. இந்த 2020-21-ம் நிதியாண்டில் பிப். வரை 23 லட்சத்து 89 ஆயிரத்து 217 பத்திரங்கள் பதியப்பட்டதன் மூலம், ரூ.9 ஆயிரத்து 313 கோடியே 89 லட்சம்கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x