Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM

இடைநின்ற மாணவர்களுக்கு மறுசேர்க்கை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் சேர்க்கை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் கே. விவேகானந்தன், அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

போதுமான வருகைப் பதிவுஇல்லாததால் இடைநின்ற மாணவர்களுக்கு கல்லூரியில் மீண்டும் சேர்க்கை அளிக்கலாம். மேலும், முழுநேர படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 6 ஆண்டுகள் வரையும், பகுதிநேர மாணவர்களுக்கு 7 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கலாம்.

அதேபோல், பருவக்கட்டணம் செலுத்தி ஹால்டிக்கெட் பெற்றபின் உடல்நலக்குறைவால் தேர்வுஎழுதாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் படிப்பை தொடரலாம். மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்களை மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி பிப்.12-க்குள் மறுசேர்க்கை பணிகளை கல்லூரிகள் முடித்து அதன் அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x