Published : 25 Jan 2021 03:14 AM
Last Updated : 25 Jan 2021 03:14 AM

பாமக நிர்வாகக் குழு கூட்டம் தள்ளிவைப்பு

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில்கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் 5 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், முதல்வர் பழனிசாமியுடன் பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், 20 சதவீத தனி இட ஒதுக்கீடுக்கு பதிலாக, உள் ஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசிடம் இருந்து எந்தபதிலும் வரவில்லை.

இதையடுத்து, வரும் 29-ம்தேதி காலை 11 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலகங்கள் முன்புபோராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக, 25-ம் தேதி (இன்று) நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட பாமக நிர்வாக குழுவின் அவசரக் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக வரும்31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x