Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

தொழிலாளர் துறை ஆணையராக வள்ளலார் நியமனம்

ஆவின் மேலாண் இயக்குநர் எம்.வள்ளலார், தொழிலாளர் துறை ஆணையராக நியமனம் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலர் எஸ்.அமிர்த ஜோதி, சமக்ர சிக் ஷா மாநில திட்ட இயக்குநராகவும், நில நிர்வாகத்துறை இணை ஆணையர் கே.கற்பகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின் ஆளுமை இணை இயக்குநர் பி.ரமண சரஸ்வதி, இந்துஅறநிலையத் துறை கூடுதல் ஆணையராகவும், ஆவின் மேலாண் இயக்குநர் எம்.வள்ளலார், தொழிலாளர் துறைஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஆர் நந்தகோபால் ஆவின் மேலாண்இயக்குநராகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர்மின்ஆளுமை இணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x