Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி,ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் நேற்று தொடங்கியது.

5 கல்லூரிகள்

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் தமிழகத்தில் 5 அரசு கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 20 தனியார்கல்லூரிகளில் உள்ள இடங்களில்15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

இந்நிலையில், பிஎஸ்எம்எஸ்,பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் நேற்று காலை தொடங் கியது. வரும் 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் 31-ம் தேதி மாலை 5.30 மணிக்குள், ‘செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106’ என்றமுகவரியில் சமர்ப்பிக்க வேண் டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x