Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

தமிழகத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா குஜராத் பாஜக எம்பி அபய் பரத்வாஜ் சென்னையில் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 1,404 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஜராத் பாஜக எம்பி அபய் பரத்வாஜ் நேற்று உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 868, பெண்கள் 536 என மொத்தம் 1,404 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 380, கோவையில் 141 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 83,319 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 8,183 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 60,617 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் சென்னையில் 422 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 3,702 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 4 பேர், தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என நேற்று 10 பேர் உயிரிழந்தனர்.இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் பாஜக எம்பி உயிரிழப்பு

மாநிலங்களவை உறுப்பினராகவும், குஜராத் மாநில பாஜகமூத்த தலைவராகவும் இருந்தவர் அபய் பரத்வாஜ்(66). அண்மையில் கரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளால் அவரது உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சென்னையில் உள்ளஎம்ஜிஎம் மருத்துவமனையில் அக்.9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர்உயிரிழந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் அனுராதா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x