Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளிமாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.11 ஆயிரம் மட்டுமே. ஆனால், தனியார் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணமாக பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பிலும், 92 பேர் பிடிஎஸ்படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இவர்களில் பல மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் தற்போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுபள்ளி மாணவர்கள் பொருளா தார ரீதியில் மிகவும் அடித்தட்டு குடும்பங்களைச் சார்ந்தவர்கள். ஆகவே அரசுப் பள்ளியில் பயின்று தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவர்களின் கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் என்பதால் அரசுப் பள்ளிமாணவர்களின் நிலை சிக்கலாகியுள்ளது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம்கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x