Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

திருமண உதவி திட்டத்துக்காக ரூ.362 கோடியில் 90 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு டெண்டர் சமூகநலத் துறை கோரியது

சென்னை

திருமண உதவித் தொகை திட்டத்துக்காக ரூ.362 கோடி மதிப்பில் 90,500 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய சமூகநலத் துறை டெண்டர் கோரியுள்ளது.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக சமூகநலத் துறையின் மூலம் 5 வகையான திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வித் தகுதிக்கு ஏற்ப 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தங்க நாணயம் டெண்டர் முறையில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இதன்படி ரூ.362 கோடிமதிப்பில் 90,500 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய சமூகநலத் துறையின் மூலம் டெண்டர்கோரப்பட்டுள்ளது. டெண்டர் புள்ளிகளை தாக்கல் செய்ய டிச. 14-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

இதுதொடர்பாக சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

ஊரடங்கு காலத்திலும் ஏராளமான பெண்கள் திருமண உதவித் தொகையை பெறுவதற்காக விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். அவர்களுக்கு விரைவில்திருமண உதவித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாகத்தான் தங்க நாணயங்களை கொள்முதல்செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் டெண்டர் இறுதி செய்யப்பட்டு தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படும். இதைத்தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப தங்க நாணயங்கள் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x