Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

‘இ-சஞ்சீவினி ’திட்டம் மூலம் 2.03 லட்சம் பேர் பயன் பெற்றனர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

இணையதளம் மூலம் மருத்துவஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 பேர் பயன்அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காணொலியில் ஆலோசனை

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் மருத்துவர்களை பொதுமக்கள் நேரடியாக சந்திக்க இயலாத நிலையைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை முதல்வர் பழனிசாமி, கடந்த மே 13-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த சேவையைப் பெற esanjeevaniopd.in என்ற இணையதளம் அல்லது esanjeevaniopd என்ற செயலி மூலமாகவோ தங்களது செல்போன் எண்ணைப் பதிவு செய்து மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம். மேலும், மருத்துவரின் மின்னணு பரிந்துரைச் சீட்டு செல்போனுக்கு அனுப்பிவைக்கப்படும். அதைக் கொண்டு,மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவிலேயே அதிகபட்சஎண்ணிக்கையில் மருத்துவர்களை ஈடுபடுத்தியும், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இச்சேவையை வழங்கியதிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இத் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 பேர் பயனடைந்துள் ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x