Published : 19 Sep 2021 03:12 AM
Last Updated : 19 Sep 2021 03:12 AM

இந்தி நடிகர் சோனு சூட் : ரூ.20 கோடி வரி ஏய்ப்பு : வருமான வரித் துறை குற்றச்சாட்டு

மும்பை

இந்தி நடிகரான சோனு சூட்அருந்ததி, சந்திரமுகி போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர்சமீபத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறுஉதவிகளை செய்து பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார். இவரைபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில்களமிறக்க ஆம் ஆத்மி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சோனு சூட் டுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 3 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.20 கோடி வரை சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நடிகர் சோனு சூட் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை எல்லாம், போலியான கடன் பத்திரங்களாகக் காட்டியுள்ளார். வரி ஏய்ப்பு செய்வதற்காகவே இதை அவர் திட்டமிட்டு செய் துள்ளார்’’ என்றனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x