Published : 05 Sep 2021 03:14 AM
Last Updated : 05 Sep 2021 03:14 AM

12 உயர் நீதிமன்றங்களுக்கு68 புதிய நீதிபதிகள் நியமனம் : மத்திய அரசுக்கு கொலிஜியம் குழு பரிந்துரை

நாடு முழுவதும் 12 உயர் நீதிமன்றங்களில் 68 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய கொலிஜியம் குழு கடந்த ஆகஸ்ட் 24, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கூடியது. அப்போது நாடு முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டங்களில் 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இருந்து 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை, கொல்கத்தா உட்பட 12 உயர் நீதிமன்றங்களில் இவர்களை புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் குழு பரிந்துரை செய்திருக்கிறது. 68 பேரில் 44 பேர் வழக்கறிஞர்கள். 24 பேர் நீதிபதிகள் ஆவர். பரிந்துரை பட்டியலில் மொத்தம் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதன்படி மூத்த வழக்கறிஞர்கள் சுந்தரம் மதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோரின் பெயர்கள் மத்திய சட்டஅமைச்சகத்துக்கு அனுப்பப்பட் டுள்ளன.

அலகாபாத் உயர் நீதிமன்றம் 16 பேர், கொல்கத்தா உயர் நீதிமன்றம் 10 பேர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2 பேர், குவாஹாட்டி உயர் நீதிமன்றம் 5 பேர், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் 4 பேர், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2 பேர், கேரள உயர் நீதிமன்றம் 8 பேர், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஒருவர், பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் 4 பேர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x