Published : 13 Mar 2021 03:11 AM
Last Updated : 13 Mar 2021 03:11 AM

உ.பி.யில் சாலையோர வழிபாட்டு தலங்களை அகற்ற அரசு உத்தரவு :

லக்னோ

உத்தர பிரதேச உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உ.பி.யில் சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சாலை யோரங்களில் மத வழிபாட்டுத் தலங்களையோ அல்லது வேறு எந்தவொரு கட்டுமானத்தையோ அனுமதிக்க முடியாது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மற்றும் அதற்கு பிறகு கட்டப்பட்ட இத்தகைய கட்டுமானங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

அவை 6 மாதங்களுக்குள் வேறு சொந்த நிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x