Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எல்எல்ஆர் சான்று உள்ளிட்ட : 18 சேவைகளை ஆர்டிஓ செல்லாமல் ஆன்லைனிலேயே பெறலாம்

புதுடெல்லி

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கக் கடைசி தேதி நெருங்கிவிட்டதா கவலை வேண்டாம் உரிமம் புதுப்பித்தல், நகல் உரிமம் பெறுதல் மற்றும் எல்எல்ஆர் சான்று உள்ளிட்ட 18 சேவைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலமே பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல் முறையின் மூலம் 18 விதமான சாலைப் போக்குவரத்து சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும். இதற்கு 12 இலக்கு ஆதார் எண்ணை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்று ஆகியவற்றுடன் இணைத்தால் போதுமானது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் பெறக்கூடிய சேவைகளையும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பதற்குப் பதிலாக ஆன்லைன் மூலம் சேவைகளை இருந்த இடத்திலிருந்தே எளிதில் மக்கள் பெற முடியும்.

ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சேவைகள் பின்வருவன: எல்எல்ஆர் சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தின் நகல், உரிமச் சான்றிதழில் முகவரி மாற்றம், பதிவுச் சான்றிதழ், சர்வதேச ஓட்டுநர் அனுமதி, தற்காலிக மோட்டார் வாகனப் பதிவுக்கான விண்ணப்பம், முழுவதுமாகக் கட்டுமானம் செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுக்கான விண்ணப்பம், மேலும் வாகனப் பதிவு சான்றிதழின் நகல், வாகனப் பதிவுக்கான என்ஓசி சான்று, மோட்டார் வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், வாகனப் பதிவு சான்றிதழில் முகவரி மாற்ற அறிவிப்பு, ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயறிசி பெறுவதற்கான விண்ணப்பம், வாடகை வாகன ஒப்பந்த சான்று உள்ளிட்ட வசதிகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x