Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

உள்நாட்டு விமானக் கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு

உள்நாட்டு விமானங்களின் வழித் தடங்கள், பயண நேரத்தை அடிப்படையாகக் கொண்டு புதியகட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச விலை வரம்பில் 10 சதவீதமும், அதிகபட்ச விலை வரம்பில் 30 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லிக்கும் மும்பைக்கும் இடையிலான விமான பயண கட்டணம் ரூ.3,500 முதல் ரூ.10,000 வரையிலாக இருந்தது. புதிய கட்டணத்தின்படி ரூ.3,900 – ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது. விமான எரிபொருளுக்கான விலைஉயர்ந்துள்ள நிலையில், பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கட்டணமானது விமான சேவை கரோனாவுக்கு முன்பு இருந்தது போல் முழுமையான அளவில் நடைமுறைக்கு வரும் வரையில் நீடிக்கும் என்று விமான துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘சில விமான நிறுவனங்கள் 100 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோருகின்றன. சில நிறுவனங்கள் தற்போதைய அளவில் தொடர விரும்புகின்றன. 80 சதவீதத்துக்கு மேல் பயணிகளை அனுமதிப்பது என்பது கரோனா வைரஸ் பரவலின் போக்கைச் சார்ந்து இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்பட்ட விமான சேவையில், டிசம்பர் 3, 2020 முதல் 80 சதவீத பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் முதல் 100 சதவீத அளவில் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x