Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் மாரடைப்பால் காலமானார்

பாலிவுட் நடிகரும், நடிகர் ராஜ்கபூரின் மகனுமான ராஜீவ் கபூர் (58) நேற்று மும்பையில் மாரடைப்பால் காலமானார்.

பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் மகனான ராஜீவ் கபூர் மும்பையிலுள்ள செம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இன்லாக்ஸ் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுச் செய்தியை அவரது உறவினரான நீத்து கபூர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ராஜீவ் கபூர் மறைவுச் செய்தியை அறிந்ததும் ராஜ் கபூர் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நடிகைகள் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், நடிகர் ரன்வீர் கபூர் உள்ளிட்டோர் ராஜீவ் கபூர் வீட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ் கபூர், ராம் தேரி கங்கா மைலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1983-ல்இவர் ஏக் ஜான் ஹேய்ன் ஹம் என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார். ராம் தேரி கங்கா மைலி படம் இவருக்கு சூப்பர் ஹிட்டான படமாக அமைந்தது. இவர், நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x