Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

தலைமைச் செயலகத்தில் உதயநிதி படம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் :

சென்னை

தலைமைச் செயலகத்தில் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளதை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக தலைமைச் செயலகத்தில் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற்றிருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ட்விட்டரில், “தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற்றுள்ளது. இது தலைமைச் செயலகமா? அறிவாலயமா?" என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x