Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - 2 - 1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது பெரு :

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது.

பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் பெரு - கொலம்பியா அணிகள் மோதின. 17-வது நிமிடத்தில் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து செர்ஜியோ பெனா அடித்த பந்து கோல் வலையை துளைக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் முதல் பாதியில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படவில்லை. 53-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் வைத்து கொலம்பியாவின் மிகுவல் போர்ஜாவை பெரு அணியின் பெட்ரோ காலிஸ் விதிகளை மீறி முரட்டுத்தனமாக இடைமறித்தார்.

இதனால் கொலம்பியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி மிகுவல் போர்ஜா கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது. 64-வது நிமிடத்தில் கொலம்பியாவின் யேர்ரி மினா சுய கோல் அடித்தார். இதனால் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போனது. முடிவில் பெரு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

‘பி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெனிசுலா - ஈக்வேடார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. வெனிசுலா அணி தரப்பில் 51-வது நிமிடத்தில் காஸ்டிலோவும், காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் ஹெர்னாண்டஸும் கோல் அடித்தனர். அதேநேரம் ஈக்வேடார் அணி சார்பில் 39-வது நிமிடத்தில் பிரீசியடோவும், 71-வது நிமிடத்தில் பிளாட்டாவும் கோல் அடித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x