Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கூட்டுறவு சங்கங்கள் மூலம் - விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் விவசாயிக ளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, திருச்சி மாவட் டத்தில் செயல்பட்டு வரும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு பயிர்க் கடன் வழங்கவும், போதுமான அளவுக்கு ரசாயன உரங்களை அனைத்து சங்கங்களிலும் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.325.51 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, இந்த ஆண்டு குறுவை சாகுபடி மற்றும் இதர பயிர் சாகுபடிகளுக்கு விவசாயிகளுக்கு தேவையின் அடிப்படையிலும் தகுதிகளுக்குட்பட்டும் பயிர்க் கடன் வழங்க ஆயத்த நிலையில் அனைத்து சங்கங்களும் உள்ளன.

மேலும், குறுவை நெல் சாகு படிக்கு தேவையான யூரியா(1,000 டன்), டிஏபி (400 டன்), பொட்டாஷ் (650 டன்), காம்ப்ளக்ஸ் (950 டன்) ஆகியவை மொத்தம் 3 ஆயிரம் டன் இருப்பில் உள்ளன.

கூடுதலாக தேவைப்படும் உரங்களை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திலிருந்து கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு போதிய அளவு உரங்களை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயிர்க் கடன் தேவை யுள்ள விவசாயிகள் தொடர் புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் கடன் மனு, சிட்டா அடங்கல் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் மறுக்கப்பட்டாலோ அல்லது கால தாமதம் ஏற்படுவதாக உணர்ந்தாலோ உடன் சரக துணைப் பதிவாளர்களை திருச்சி, லால்குடி- 9488605317, முசிறி- 8056676183 மற்றும் மண்டல இணைப்பதிவாளரை 7338749300 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x