Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் - பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது :

சென்னை கே.கே. நகரில் உள்ளபத்ம சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்ராஜகோபாலன் (59). நங்கநல்லூர் இந்து காலனியில் வசிக்கிறார். வகுப்பில் மாணவிகளை இவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அநாகரிகமாக பேசியதாகவும், பாலியல் உணர்வை தூண்டும் வகையில்வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகள், படங்களை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது நடந்த ஆன்லைன் வகுப்புகளின்போதும் மாணவிகளிடம் எல்லை மீறியதாகவும், அரைகுறை ஆடைகளுடன் வகுப்பு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆசிரியர் குறித்துமேலும் சிலர் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீஸார் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி அப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

ராஜகோபாலனினின் செல்போன்,லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.அதை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ஆய்வு செய்தபோது, அதில் வாட்ஸ்அப் தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த தகவல்களை ‘ரெக்கவர்’ தொழில்நுட்பம் மூலம் போலீஸார் மீட்டுள்ளனர்.

பிஎஸ்பிபி பள்ளியில் ராஜகோபாலன் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளி மாணவிகளுக்கு பாலியல்ரீதியிலான தொல்லை கொடுக்கும்வகையில் ஆபாச தகவல்களை அவர்அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க பகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும், மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மிரட்டியதாகவும் வாய்மொழியாக ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, போக்சோ சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளில் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, 24-ம் தேதி இரவு கைது செய்தனர். பின்னர், அவரை மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நேற்று காலை ஆஜர்படுத்தி, ஜூன் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. புகார் தெரிவிக்க விரும்புவோர் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியை (94447 72222) தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பள்ளி நிர்வாகிகள்சிலரிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். புகார் எழுந்ததும், பள்ளியில் இருந்து ஆசிரியர் ராஜகோபால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x