Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

பேட்மின்டன் வீராங்கனை - ஜுவாலா கட்டாவை மணந்தார் விஷ்ணு விஷால் : திரையுலகினர், நண்பர்கள் வாழ்த்து

நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தமிழில் ‘வெண்ணிலா கபடிகுழு’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘காடன்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரும், பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2020 ஜனவரியில் இதைஉறுதி செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனது.

சமீபத்தில் வெளியான ‘காடன்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், விரைவில் ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

இந்நிலையில், ஹைதராபாத்தில் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக மெகந்தி திருவிழா உள்ளிட்ட சடங்குகளும் நடந்தன. திரையுலகினர், நண்பர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x