Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பராமரிப்பு பணி காரணமாக - கோவை வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து :

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘ செகந்திராபாத் மண்டலத்துக்குட்பட்ட காசிபேட்- பால்ஹர்ஷா பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கோவை-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையேயான சிறப்பு ரயில் (எண்:06077) வரும் 11,18-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, ஹஸ்ரத் நிஜாமுதீன்-கோவை இடையேயான சிறப்பு ரயில் (எண்:06078) வரும் 4,21-ம்தேதிகளிலும், கோவை வழியாக செல்லும் கோரக்பூர்-கொச்சுவேலிஇடையேயான சிறப்பு ரயில்(எண்:02511) வரும் 11,15,16,18,22,23-ம் தேதிகளிலும், கொச்சுவேலி-கோரக்பூர் சிறப்பு ரயில் (எண்:02512), வரும் 13,14,18,20,21-ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, கோவை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையேயான சிறப்பு ரயில் (எண்:06167),வரும் 13,20-ம் தேதிகளிலும், ஹஸ்ரத்நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்புரயில் (எண்:06168), வரும் 16,23-ம்தேதிகளிலும், கோர்பா-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:02647), வரும் 14,17,21,24-ம் தேதிகளிலும், கொச்சுவேலி-கோர்பா சிறப்பு ரயில்(எண்:02648), வரும் 12,15,19,22-ம் தேதிகளிலும் ரத்து செய்யப் படுகிறது’’ என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x