Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் :

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட கடந்த மாதம் 25-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து, அவரது பெயரில் மனு அளித்துள்ளனர். இதேபோல், தேமுதிக பொருளாளர் பிரமேலதா, எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரனும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விருகம்பாக்கம் அல்லது விருத்தாசலத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினார். அப்போது, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. வரும் 8-ம் தேதி வரையில் நேர்காணல் நடக்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x