Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM

இருப்பு பாதைக்கு இணையாக அணுகு சாலை கேட்டு போராட்டம்

கோவில்பட்டியில் இருப்பு பாதைக்கு இணையாக அணுகு சாலை அமைக்கக் கோரி, பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், சீனிவாச நகர்,அத்தைகொண்டான், செண்பகவல்லி நகர் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் நகர், காந்தி நகர் பகுதி மக்கள், கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், சீனிவாச நகர், அத்தைகொண்டான், செண்பகவல்லி நகர் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட திலகர் நகர், காந்தி நகர் பகுதியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது, கடம்பூர் - கோவில்பட்டி இடையே 2-வது ரயில்வே இருப்புபாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதனால், எங்கள் பகுதிக்குள் வரமுடியாத வண்ணம்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் வர முடியாத நிலை உள்ளது.

எனவே, கோவில்பட்டி லட்சுமி மில் ரயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கப்பாதை வரை இருப்பு பாதைக்கு இணையாக அணுகு சாலை அமைக்க வேண்டும். மேலும், ராமசாமி தாஸ் பூங்கா எதிர்புறம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள சாலையிலும், தட்சிணாமூர்த்தி கோயில் தெருவின் கடைசியிலும் இருப்பு பாதைக்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x