Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

டிச.1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

எச்ஐவி தொற்றுள்ளோரை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்று உலக எய்ட்ஸ் தினத்தில் பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தி:

மக்களிடையே எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலகஎய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகஎய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்’ ஆகும்.எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசால் தனிக் கவனம்செலுத்தப்பட்டதன் காரணமாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எச்ஐவி தொற்றின் சதவீதம் 2010-11-ம் ஆண்டு 0.38 சதவீதத்தில் இருந்து 2019-ம் ஆண்டு 0.18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய எச்ஐவி தொற்றைகண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள், 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களை கொண்டு எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சைமையங்களும் 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கஅனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டம்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியம், இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்திமாத ஓய்வூதியம், எச்ஐவி தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர இலவச பேருந்து அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, சிகிச்சை,பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்க இளைப்பாறுதல் மையம் என்னும் திட்டத்துக்காக ரூ.2 கோடியே 41 லட்சம் நிதியுதவியுடன் தமிழகம் முழுவதும் 34 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எச்ஐவி அல்லது எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x