ரகசி​யம் வெளியே கசியாது! - எளிதில் கற்கலாம் ஏஐ 12

ரகசி​யம் வெளியே கசியாது! - எளிதில் கற்கலாம் ஏஐ 12
Updated on: 
2 min read

செய்​யறி​வுக் கரு​வி​கள் தரவு​களைப் பகுப்​பாய்வு செய்து விரைவாகப் பதில்​களை வழங்​கினாலும், வங்​கிக்​கணக்கு விவரங்​கள், நிறு​வனத்​தின் ரகசிய அறிக்​கைகள், தனிப்​பட்ட மருத்​துவ ஆவணங்​கள், காப்​புரிமை சார்ந்த ஆய்​வுக் கட்​டுரைகளை இணை​யத்​தில் இயங்​கும் பொது​வான செய்​யறி​வுத் தளங்​களில் பதிவேற்​றும்​போது தரவுப் பாது​காப்பு (Data Privacy & Confidentiality) கேள்​விக்கு உள்​ளாகிறது. அப்​படி​யான தேவையுடையோ​ருக்கு நம்​பிக்​கையளிக்​கும் தீர்​வாக உரு​வெடுத்​துள்​ளது PrivateGPT என்​னும் பொது வள (Open-Source) செய்​யறிவு மென்​பொருள்.

இணை​யமின்றி இயங்​கும் வசதி (100% Data Privacy & Security)

PrivateGPT-ஐ பயன்​படுத்த எந்​தவொரு இணைய இணைப்​பும் தேவை​யில்லை. நாம் இதில் பதிவேற்​றும் பிடிஎஃப் (PDF), வேர்டு (Docx), எக்​செல் அட்​ட​வணைகள் (Excel), ஆவணங்​கள் (Files) என அனைத்​தும் வெளிப்​புறச் சேவையகங்​களுக்​குச் (External Servers) செல்​லாது. அனைத்​துத் தரவு​களும் பயனரின் சொந்​தக் கணி​னி​யின் நினைவகத்​திலேயே (Local Storage) மிகப் பாது​காப்​பாகச் சேமிக்​கப்​பட்​டுச் செய​லாக்​கப்​படு​கின்​றன.

RAG தொழில்​நுட்​பமும் ஆவணப் பகுப்​பாய்​வும் (Document Q&A with RAG)

இதிலுள்ள ‘Retrieval-Augmented Generation’ (RAG) நுட்​பம், ஆயிரக்​கணக்​கான பக்​கங்​களைக் கொண்ட பெரிய புத்​தகங்​களை​யும் சிக்​கலான ஆவணங்​களை​யும் படித்து, அவற்​றி​லுள்ள முக்​கிய​மான தகவல்​களை நொடிகளில் கண்​டறிந்து தரு​கிறது. நாம் கேட்​கும் கேள்​வி​களுக்கு, ஆவணத்​தின் எந்​தப் பகுதி​யில் அல்​லது பக்​கத்​தில் விடை உள்​ளது என்​ப​தற்​கான ஆதார மேற்​கோள்​களு​டனும் (Citations) இது தெளிவாகப் பதில் அளிக்​கிறது.

நெகிழ்​வான மொழி மாதி​ரி​கள் (Custom LLM)

பயனர்​கள் தங்​களின் கணினி வசதிக்​கேற்ப Llama, Mistral, Gemma போன்ற எந்​தவொரு பொது வள மொழி மாதி​ரியையும் (Open-Source LLMs) இதில் எளிதாக இணைத்​துப் பயன்​படுத்​தலாம். மேலும், GPU Acceleration-ஐ பயன்​படுத்தி, மிக வேக​மாகப் பதில்​களைப் பெறவும் இதில் வசதி​யுள்​ளது.

எளிய நிறு​வல் முறையும், API வசதி​களும் (Easy Setup & Enterprise API)

ஓரளவு தொழில்​நுட்ப அறிவு கொண்​ட​வர்​கள்​கூட, எளிமையான கட்​டளைகள் (Commands) மூலம் இதைத் தங்​கள் கணி​னி​யில் நிறுவி உடனடி​யாகப் பயன்​படுத்​தத் தொடங்​கலாம். மேலும், மென்​பொருள் உரு​வாக்​குநர்​கள் தங்​களு​டைய செயலிகளு​டன் இதை இணைத்​துப் பயன்​படுத்​தும் வகை​யில் அமைந்த REST API வசதி​களை​யும் இது வழங்​கு​கிறது.

பராமரிப்​புச் செலவே இல்லை (Zero Subscription Cost)

பொது​வாகச் சக்​திவாய்ந்த செய்​யறி​வுச் சேவை​களைப் பயன்​படுத்த மாதந்​தோறும் கட்​ட​ணம் செலுத்த வேண்​டி​யிருக்​கும். ஆனால் PrivateGPT ஒரு பொது வள மென்​பொருள் என்​ப​தால், இதைத் தங்​களின் சொந்​தக் கணி​னி​யில் நிறுவி வாழ்​நாள் முழு​வதும் இல​வச​மாகவே பயன்​படுத்​திக்​கொள்ள முடியும்.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறுபடுகிறது?

இணைய இணைப்பு கட்​டாயம் தேவைப்​படும் ChatGPT, Claude, Gemini உள்​ளிட்ட தளங்​களில் கொடுக்​கப்​படும் தரவு​கள் அவற்​றின் கிளவுட் சேவையகங்​களுக்​குச் செல்​கின்​றன. ஆகவே, தரவு​களின் பாது​காப்பு குறித்த பல்​வேறு சந்​தேகங்​கள் பயனர்​களுக்கு எழுகின்​றன.

ஆனால், PrivateGPT-க்கு இணைய இணைப்பு தேவை​யில்லை என்​ப​தால் தரவு​கள் பயனரின் கணி​னியை விட்டு வெளியேறு​வதில்லை.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

வழக்​கறிஞர்​கள், மருத்​து​வர்​கள், நிதி நிறு​வனப் பகுப்​பாய்​வாளர்​கள், அரசு ஆராய்ச்சி அமைப்​பு​கள், நிறு​வனங்​களின் முதன்​மைச் செயல் அதி​காரி​கள் (CEOs), ஆய்​வுக் கட்​டுரைகளை எழுதும் பேராசி​ரியர்​கள். தரவுப் பாது​காப்​பில் எந்​தவொரு சமரசமும் செய்து​கொள்​ளாமல், நமது கணி​னி​யிலேயே செய்​யறி​வின் முழு ஆற்​றலை​யும் பெற்​றுக்​கொள்ள PrivateGPT வகைசெய்​கிறது.

PrivateGPT-ஐ தர​விறக்க: https://github.com/zylon-ai/private-gpt

செய்யறிவு விதி: ஒரே கட்​டளை​யில் அனைத்​துச் சிக்​கல்​களுக்​கும் விடை கேட்​காதீர்​கள். பெரிய வேலை​யைச் சிறிய, எளிய படிகளாகப் பிரித்​துக் கேளுங்​கள். இப்​படிச் செய்​வ​தால் செய்​யறிவு தரும் விடை மிகவும் துல்​லிய​மாகவும் பயனுள்​ள​தாகவும் இருக்கும்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

ரகசி​யம் வெளியே கசியாது! - எளிதில் கற்கலாம் ஏஐ 12
கட்டுரையைப் படமாக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 11

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in