பவர்​பா​யின்ட்​டைப் பின்​னுக்​குத் தள்ளும் Gamma | எளிதில் கற்கலாம் ஏஐ 9

பவர்​பா​யின்ட்​டைப் பின்​னுக்​குத் தள்ளும் Gamma | எளிதில் கற்கலாம் ஏஐ 9
Updated on: 
2 min read

பவர்​பா​யின்ட் (PowerPoint) உள்​ளிட்ட பாரம்​பரியக் கருவி​களில் விளக்​கக் காட்​சி​யையோ (Presentation/Slides) ஆவணத்​தையோ உரு​வாக்க வேண்​டுமெனில் வண்​ணங்​களைத் தேர்வு செய்​வது, வடிவ​மைப்​பது (Layouts), படங்​களை வரிசைப்​படுத்​து​வது எனப் பல மணிநேரம் செல​விட வேண்​டிய​திருக்​கும். இதற்கு மாற்​றாக, வெறும் குறிப்​புகளைக் கொடுத்​தாலே சில விநாடிகளில் தரமான விளக்​கக் காட்​சிகள், ஆவணங்​கள், இணை​யத்​தளங்​களை உருவாக்கி அளிக்​கிறது ‘Gamma’ தளம்.

வழக்​க​மான Slide தயாரிப்பு மென்​பொருள்​களைப் போலல்​லாது, செயற்கை நுண்​ணறி​வின் துணை​யோடு உள்​ளடக்​கத்​தை​யும் (Content) வடிவ​மைப்​பை​யும் (Design) ஒரே நேரத்​தில் இது சிறப்​புறக் கையாள்​கிறது.

உடனடி வடிவ​மைக்​கும் திறன்

Gamma தளத்​தில் நாம் என்ன தலைப்​பில் ஸ்லைடு அமைக்க வேண்​டும், என்ன செய்தி இடம்​பெற வேண்​டும் என்​பதை உள்​ளீ​டாகக் (Prompt) கொடுத்​தால் போதும். அந்​தத் தலைப்பை ஆராய்ந்​து, தேவை​யான பத்​தி​கள், தலைப்​பு​கள், படங்​கள், வரைபடங்​களு​டன் கூடிய முழு​மை​யான ஆவணத்தை நிமிடங்​களில் உரு​வாக்​கித் தரு​கிறது. இதில் உள்ள ‘Smart Layout’ வசதி, நாம் புதிய பல தகவல்​களைச் சேர்க்​கும்​போது, ஆவணத்​தின் வடிவ​மைப்பு குலை​யாத​வாறு தானாகவே சீரமைத்​துக் கொள்​கிறது.

ஒரே தளத்​தில் பல வடிவங்​கள் (Presentations, Docs & Webpages)

குறிப்​பிட்​டதொரு கருத்தை அடிப்​படை​யாகக் கொண்டு விளக்​கக் காட்​சிகளை மட்​டுமன்றி ஆவணங்​களை​யும் (Documents) இணை​யப் பக்​கங்​களை​யும்​கூட (Webpages) இந்​தத் தளத்​தில் வடிவ​மைக்க முடி​யும். பயனர்​கள் தங்​களுக்​குத் தேவை​யான வண்​ணங்​கள், இலச்​சினை​களை தேர்ந்​து​கொண்​டால் அது அனைத்​துப் பக்​கங்​களி​லும் எதிரொலிப்​பது இன்​னொரு சிறப்​பு.

நேரலைத் தொகுப்​பாக்​கம் (Interactive Editing)

ஆவணத்தை உரு​வாக்​கிய பிறகு, அதில் மாற்​றங்​களைச் செய்ய விரும்​பி​னால் மீண்​டும் முதலிலிருந்து தொடங்க வேண்​டிய​தில்​லை. இதி​லுள்ள AI Agent உதவி​யுடன் ‘வண்​ணத்தை மாற்​று’, ‘கூடு​தல் அட்​ட​வணை​யைச் சேர்’, ‘இந்​தப் பத்​தி​யைச் சுருக்​கு’ எனக் கட்​டளை​யிட்டு மாற்​றங்​களைச் செய்​து​விடலாம். மேலும், ஏற்​கெனவே இருக்​கும் PowerPoint, PDF ஆவணங்​களை​யும்​கூட இதில் பதிவேற்றி (Import) புதிய நவீன வடிவ​மைப்​புக்கு அவற்றை மாற்ற முடி​யும்.

உள்​ளிணைப்​பு​களும் தரவுப் பகுப்​பாய்​வும்

Gamma ஸ்லைடு​களில் வெறும் படங்​களை மட்​டும் வைக்​காமல் YouTube வீடியோக்​கள், Spotify பாடல்​கள், Figma மாதிரி​கள், படிவங்​களை (Forms) நேரடி​யாக உள்​ளிணைக்க முடி​யும் (Embed). மேலும், நாம் தயாரித்த விளக்​கக் காட்​சியை எத்​தனை பேர் பார்த்​தார்​கள், எந்த ஸ்லைடில் அதிக நேரம் செல​விட்​டார்​கள் என்​ப​தற்​கான பகுப்​பாய்வு (Analytics) விவரங்​களை​யும் பெற இயலும். Gamma தரும் சில தனிப்​பட்ட வசதி​களைப் பெற கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய​திருக்​கும்.

பிற செய்​யறி​வுக் கருவி​களில் இருந்து இது எவ்​வாறு வேறுபடுகிறது?

PowerPoint அல்​லது Google Slides கருவி​களில் உள்​ளடக்​கத்தை அமைத்த பிறகு, ஒவ்​வொரு அட்​டையை​யும் வடிவமைக்க அதிக நேரம் செல​விட வேண்​டிய​திருக்​கும். இந்​தக் கால​விர​யத்​தை​யும் வடிவ​மைப்​புச் சிக்​கல்​களை​யும் நீக்​கி, வேக​மாக​வும் அழகாக​வும் விளக்​கக் காட்​சிகளை உரு​வாக்​கு​வ​தில் Gamma தளம் சிறப்​பாகச் செயல்​படு​கிறது.

யாருக்​குப் பயன்​படும்?

தொழில்​முனை​வோர், விற்​பனை வல்​லுநர்​கள் (Sales & Marketing), ஆசிரியர்​கள், மாணவர்​கள், திட்ட அறிக்​கைகளைத் தயாரிக்​கும் மேலா​ளர்​கள். https://gamma.app/

செய்யறிவு விதி

உங்​கள் தேவை​யின் பின்​னணி​யை​யும் நோக்​கத்​தை​யும் நிலை​யை​யும் செய்​யறி​வுக் கருவி​களிடம் கூறுங்​கள். எந்த மாதிரி​யான விடை வேண்​டும் என்​ப​தை​யும் முன்​கூட்​டியே தெளி​வாகக் குறிப்​பிடுங்​கள். தேவை​யான தகவல்​களைக் கொடுத்​தால்​தான் சிறந்த விடை கிடைக்​கும்.

எடுத்​துக்​காட்டு கட்​டளை (Sample Prompt):

Create a 5-card interactive presentation on ‘Save Our Planet’ for school children aged 8–12. Use simple English, colorful illustrations, fun facts and cartoon characters. Explain pollution, recycling, saving water, and planting trees. Include one interactive quiz and a fun activity. Make it creative, playful and engaging.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

பவர்​பா​யின்ட்​டைப் பின்​னுக்​குத் தள்ளும் Gamma | எளிதில் கற்கலாம் ஏஐ 9
கூகுள் ஷீட்ஸையே பகுப்பாய்வுத் தளமாக மாற்றலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 8

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in