கூகுள் ஷீட்ஸையே பகுப்பாய்வுத் தளமாக மாற்றலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 8

கூகுள் ஷீட்ஸையே பகுப்பாய்வுத் தளமாக மாற்றலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 8
Updated on: 
2 min read

உல​கம் முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் தரவு​களைக் கையாளுவதற்​கும் கணக்​கு​களை நிர்​வகிப்​ப​தற்​கும் கூகுள் ஷீட்ஸ் (Google Sheets) செயலியை நாள்​தோறும் பயன்​படுத்​தி வருகின்றனர். இருப்​பினும், அதில் உள்ள சிக்​கலான தரவு​களைப் பகுப்பாய்வு செய்​ய​வும் தகவல்​களை வகைப்​படுத்​து​வதற்​கு​மான சூத்​திரங்​களை (Formulas) எழுது​வதும் பலருக்​கும் சிரம​மான காரிய​மாகவே உள்​ளது. இதை முற்​றி​லும் போக்​கி, கூகுள் ஷீட்​ஸிலேயே நேரடி​யாகச் செயற்கை நுண்​ணறிவைப் பயன்​படுத்த வழி​செய்​கிறது SheetGPT என்​னும் செய்​யறி​வுக் கரு​வி.

கூகுள் ஷீட்​ஸில் செய்​யறிவு ஆற்​றலை இணைத்​து, பல மணிநேரம் பிடிக்​கும் அட்​ட​வணை தரவுப் பணி​களைத் தானி​யங்கு முறை​யில் (Automation) சில நிமிடங்​களில் செய்து முடிக்க இந்​தக் கருவி உதவு​கிறது.

செய்​யறி​வும் சூத்​திரங்​களும்

SheetGPT-ஐ பயன்​படுத்த சிக்​கலான குறி​யீடு​களோ நிரலாக்க அறிவோ தேவை​யில்​லை. வழக்​க​மான கூகுள் ஷீட்ஸ் சூத்​திரங்​களைப் போலவே =GPT (உங்​கள் கேள்​வி) எனக் குறிப்​பிட்​டால் போதும்; செய்​யறிவு அதற்​கான விடையை நேரடி​யாக அந்த செல்​லிலேயே (Cell) வழங்​கி​விடும். மேலும், =GPT_LIST() அல்​லது =GPT_FILL() போன்ற சிறப்​புச் சூத்​திரங்​களைப் பயன்​படுத்தி வரிசை​யான தரவு​களை​யும் விடு​பட்ட தகவல்​களை​யும் நொடிகளில் தானாக நிரப்ப முடி​யும்.

பெரு​மளவி​லான தரவுப் பகுப்​பாய்வு (Bulk Processing & Categorization)

ஆயிரக்​கணக்​கான வாடிக்​கை​யாளர் கருத்​துகளோ (Customer Reviews), கருத்​துக்​கணிப்​பு​களோ அட்​ட​வணை​யில் இருக்​கும்​போது, அவற்​றின் போக்​கைப் (Sentiment Analysis) பகுப்​பாய்வு செய்ய இது பெரிதும் உதவு​கிறது. நேர்​மறை (Positive) அல்​லது எதிர்​மறை (Negative) என வகைப்​படுத்​துதல், நீண்ட அறிக்​கைகளைச் சுருக்​குதல், தகவல்​களை முறைப்​படுத்​துதல் போன்ற பணி​களைச் செய்​யறி​வின் துணை​யுடன் ஆயிரக்​கணக்​கான செல்​களில் நொடிகளில் செய்து முடிக்​கலாம்.

உள்​ளடக்க உரு​வாக்​க​மும் மொழிபெயர்ப்​பும் (Content Generation & Translation)

சந்​தைப்​படுத்​துபவர்​களும் (Marketers) விற்​பனைப் பிர​தி​நி​தி​களும் அட்​ட​வணை​யில் இருந்​த​படி விளம்பர உரைகளை​யும் பொருள்​கள் குறித்த விளக்​கங்​களை​யும் (Product Descriptions) மின்​னஞ்​சல்​களை​யும் எளி​தாக உரு​வாக்க முடி​யும். மேலும், நூற்​றுக்​கும் மேற்​பட்ட மொழிகளில் தரவு​களைச் சூழலுக்கு ஏற்ப உடனுக்​குடன் மொழிபெயர்க்​க​வும் இது உதவு​கிறது.

பிழை​திருத்​த​மும் தரவுத் தூய்​மைப்​படுத்​தலும் (Data Cleaning)

அட்​ட​வணை​யில் உள்ள குழப்​ப​மான பெயர்​கள், தவறான குறி​யீடு​கள், மாறு​பட்​டிருக்​கும் தரவு​களைச் சீரமைக்​க​வும் SheetGPT உதவு​கிறது. ஒரே கட்​டளை​யில் அனைத்​துத் தரவு​களை​யும் ஒரே சீரான வடிவத்​துக்கு (Formatting) மாற்​றித்​தரு​வது இதன் கூடு​தல் சிறப்​பு.

இணை​யத் தேடலும் நேரலைத் தரவு​களும் (Web Browsing & Live Data Integration)

வழக்​க​மான செய்​யறி​வுக் கருவி​களைப்​போலக் குறிப்​பிட்ட காலத்​துக்கு உள்​பட்ட தரவு​களோடு நின்​று​வி​டா​மல், இணை​யத்​தில் நேரடி​யாகத் தேடி நேரலைத் தரவு​களைக் (Live Web Data) கூகுள் ஷீட்​ஸுக்​குள் கொண்​டு​வரும் வசதி​யும் இதில் உள்​ளது. இதன் மூலம் சமீபத்​திய சந்தை நில​வரம், விலை விவரங்​கள், நிறு​வனத் தகவல்​களை நேரடி​யாக அட்​ட​வணை​யில் இடம்​பெற வைக்க முடிகிறது.

பிற செய்​யறி​வுக் கருவி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

செய்யறிவு விதி

அரைகுறையான கட்டளைகளைக் கொடுத்துச் செய்யறிவுக் கருவிகளைக் குழப்பக் கூடாது. நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை மிகத் தெளிவாகக் கேட்க வேண்டும். தெளிவான கேள்வியே துல்லியமான பதிலைப் பெற்றுத்தரும்.

எடுத்துக்காட்டு கட்டளை (Sample Prompt)

=GPT(Analyse the dataset and provide 10 important insights) “&CHAR(10)&TEXTJOIN(CHAR(10),TRUE,BYROW(A1:P60,LAMBDA(r,TEXTJOIN(” | “,FALSE,r)))),“gpt-4o-mini",0,1500,TRUE)

தரவு​களை கூகுள் ஷீட்​ஸில் இருந்து சேகரித்​து, ChatGPT போன்ற தளங்​களில் தனித்​தனி​யாக நகலெடுத்து ஒட்டி (Copy-Paste) உரை​யாடிக் கொண்​டிருப்​பது அதிக நேரத்தை வீணடிக்​கும். ஆனால், SheetGPT அனைத்​துப் பணி​களை​யும் கூகுள் ஷீட்ஸ் ஆவணத்​தை​விட்டு வெளி​யேறாமலேயே, தானி​யங்​கு​முறை​யில் செய்து முடித்து நேரத்தை மிச்​சப்​படுத்​துகிறது. அட்​ட​வணை​களைக் கையாள்​வ​தில்

இருந்த சிக்​கல்​களை நீக்​கி, கூகுள் ஷீட்​ஸைச் சக்​தி​வாய்ந்​ததொரு செய்​யறிவு சார்ந்த தரவுப் பகுப்​பாய்வு மைய​மாக மாற்​று​வ​தில் SheetGPT முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

யாருக்​குப் பயன்​படும்?

தரவு ஆய்​வாளர்​கள், கணக்​காளர்​கள், சந்​தைப்​படுத்​துநர்​கள், விற்​பனைப் பிர​தி​நி​தி​கள்​, வணி​கர்​கள்​, மனிதவள மேலா​ளர்​கள்​, நிர்​வாகப்​ பணி​யாளர்​கள்​. https://www.sheetgpt.ai/

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.

கூகுள் ஷீட்ஸையே பகுப்பாய்வுத் தளமாக மாற்றலாம் | எளிதில் கற்கலாம் ஏஐ 8
கணக்கீட்டு அறிவின் களஞ்சியம் | எளிதில் கற்கலாம் ஏஐ 7

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in