

கட்டுரைகள், மின்னஞ்சல் களை எழுதும்போது ஒரே மாதிரி யான சொற்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதும், வாக்கியங்களின் தொனி (Tone) சரியாக அமையாமல் போவதும் இயல்புதான். நாம் எழுதும் கருத்துகளைத் தெளிவாகவும் இலக்கணப் பிழைகள் இன்றி யும், ஈர்க்கும் வகையிலும் மாற்றி யமைக்க உதவுகிறது ‘QuillBot’ எனும் செய்யறிவுத் தளம்.
பயனர் அளிக்கும் வாக்கியங்களின் கருப்பொருள் மாறாமல் அவற்றை வேறுபட்ட அழகிய சொற் களைக் கொண்டு மறுஆக்கம் (Paraphrasing) செய்யும் திறனே இந்தக் கருவியின் சிறப்பியல்பு.
மறுஆக்கம் செய்யும் கலை - ‘Paraphraser’. இதன் ‘Paraphraser’ பகுதியில், ‘Standard’, ‘Fluency’, ‘Formal’, ‘Creative’, ‘Academic’, ‘Shorten’ போன்ற பல பயன்முறைகள் (Modes) உள்ளன. நாம் எழுதிய சொற் றொடர்களை இதில் பதிவிட்டால் அதன் பொருள் மாறாமல், நாம் தேர்ந்தெடுக்கும் வகைக்கு ஏற்ப சொற்றொடர் அமைப்பையும் சொற்களையும் நொடிகளில் மாற்றியமைத்துத் தருகிறது.
பிழைதிருத்தியும் குறிப்பாகச் சுருக்குதலும் - ‘Grammar Checker & Summarizer’ இதன் இலக்கணச் சரிபார்ப்பு (Grammar Checker) வசதியைப் பயன்படுத்தி, சொற்றொடர்களில் இருக்கும் எழுத்துப் பிழைகள், நிறுத்தற்குறிகள், இலக்கணப் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்துகொள்ளலாம். மேலும், ‘Summarizer’ உதவியுடன் பல பக்கக் கட்டுரைகளின் முக்கியக் கருத்துகளை மட்டும் சுருக்கிக் குறிப்புகளாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.
நகலைக் கண்டறிவதும் செய் யறிவுக் கண்டு பிடிப்பானும் - ‘Plagiarism Checker, AI Detector, AI Humanizer’ கல்விசார் பணிகளில் பிறரின் கருத்துகளை அப்படியே நகலெடுப்பது (Plagiarism) பெருங்குற்றமாகும். இதில் இருக்கும் Plagiarism Checker, நமது கட்டுரையின் பகுதிகள் இணையத்தில் வேறு எங்காவது ஏற்கெனவே வெளியாகியுள்ளனவா என்பதைச் சரிபார்த்துச் சொல் கிறது.
இதன் AI Detector வசதியைப் பயன்படுத்தி, ஒரு கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் செய்யறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறிந்து விட முடியும். மறுபுறம், ‘AI Humanizer’ அம்சத்தைப் பயன்படுத்தி செய்யறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மனிதரால் எழுதப்பட்டதுபோல் மாற்றியமைக்கவும் முடியும்.
மொழிபெயர்ப்பும் மேற்கோள் உருவாக்கமும் - ‘Translator & Citation Generator’ முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் துல்லியமான மொழிபெயர்ப்புகளைச் செய்யும் வசதியும் இதில் உள்ளது. மேலும், ஆய்வுக் கட்டுரைகளுக்கான மேற்கோள்களையும் (Citations) இதைப் பயன்படுத்தி உருவாக்க இயலும்.
இணைய உலாவிகளுடன் இணைக்கும் வசதி - ‘Browser Extension & Integrations’ QuillBot தளத்தை நேரடியாகப் பயன்படுத்துவது மட்டுமன்றி, Chrome Extension, Microsoft Word, Gmail போன்ற செயலிகளுடனும் எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் மின்னஞ்சல் எழுதும் போதும் ஆவணங்களில் வேலை செய்யும்போதும் திருத்தங்களை அங்கேயே மேற்கொள்ள முடிகிறது.
யாருக்குப் பயன்படும்? - மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், ஆசிரியர்கள், எழுத் தாளர்கள், பத்திரிகையாளர்கள், சந்தைப்படுத்துபவர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content creators), பிழை யின்றி எழுத விரும்பும் தொழில் துறையினர். இன்றைய எண்ணி லக்க யுகத்தில் (Digital era) கருத்துப் பரிமாற்றத்தையும் எழுத்துப் பணிகளையும் மிக எளிமையாகவும் தரமாகவும் மேற்கொள்ள QuillBot பேருதவி புரிகிறது.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.