

எல்லாருக்கும் பாடல் இயற்றும், பாடும், இசையமைக்கும் திறன் கைகூடுவதில்லை. ஒருவேளை, நாம் விரும்பும் கதை களையோ கவிதைகளையோ மன உணர்வுகளையோ உடனுக்குடன் இனிமையான பாடலாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்? இசை பற்றிய கோட்பாடுகளோ, வாத்தியங்கள் வாசிக்கும் பயிற்சியோ, பாடகர்களின் உதவியோ இல்லாமல் வெறும் வரிகளை உள்ளீடாகக் கொடுத்தால் சில நொடிகளில் தொழில்முறை தரத்திலான பாடலை எழுதி, இசையமைத்து, பாடி ஆச்சரியப்படுத்துகிறது Suno.com எனும் செய்யறிவுத்தளம்.
சாதாரண ஒலிப்பதிவு மென்பொருள்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவு முறையில் இசையமைப்பு, வாத்தியங்களின் பின்னணி இசை, பாடகரின் குரல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் முழுமையான பாடலை உருவாக்கும் திறனே இதன் தனித்தன்மை.
வரிகளில் இருந்து பிறக்கும் இசை - ‘Text-to-Music’
Suno தளத்தில் நாம் விரும்பும் பாடலின் கருப்பொருளையோ வரிகளையோ தட்டச்சு செய்தால் போதும். உதாரணமாக, ‘மழைக்கால மாலை நேரத்தில் பாடும் மெல்லிசைப் பாடல்’ என்றோ ‘துள்ளலான பாப் பாடல்’ என்றோ குறிப்பிட்டால், அதற்கு ஏற்றவாறு மெட்டையும் பின்னணி இசையையும் உருவாக்கித் தருகிறது. இதில் பயனர்கள் தங்கள் சொந்தக் கவிதைகளையும் பதிவேற்றி இசைக்கச் செய்ய முடியும்.
பன்முக இசைப் பாணிகளையும் மொழிகளையும் பயன்படுத்துதல் - ‘Multi-Genre & Language Support’
கர்நாடக இசை, மேலைநாட்டு பாப், ராக், ஃபோக், ஹிப்-ஹாப் எனப் பல்வேறு இசை வடிவங்களில் பாடல்களை உருவாக்கும் வாய்ப்பை இந்தத் தளம் வழங்குகிறது. மேலும், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மிகத் தெளிவான உச்சரிப்புடன் பாடல்களைப் பாடும் திறன் இதனுள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
விருப்பத்துக்கேற்ற வடி வமைப்பு - ‘Custom Mode & Instrumental Tracks’
இசைப் பிரியர்கள் ‘Custom Mode’ அம்சத்தைப் பயன்படுத்திப் பாடலின் வரிகள் (Lyrics), இசை வடிவம் (Style of Music), பாடலின் தலைப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகத் தீர்மானிக்கலாம். குரல் ஏதும் இன்றி வெறும் பின்னணி இசை மட்டும் தேவை எனில் அதற்கான வசதியும் இதில் உள்ளது.
பாடல்களை நீட்டித்தல், ஒலி மாற்றம் - ‘Extend & Audio-to-Music’
நாம் உருவாக்கிய ஒரு நிமிடப் பாடலை மேலும் நீட்டித்து (Extend) முழுமையான பாடலாக மாற்ற முடியும். மேலும், நாம்முணுமுணுத்த சிறியதொரு ஒலிப்பதிவை (Audio Input) இதில் பதிவேற்றி, அதை அடிப்படையாகக் கொண்டு முழுமையானதொரு இசைக்கோவையை உருவாக்கும் அதிநவீன வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் போக்கில், இசையமைப்பை அனைவருக்குமான ஒன்றாக மாற்றிக் கலையுலகில் புதிய சகாப்தத்தைப் படைத்து வருகிறது Suno.
யாருக்குப் பயன்படும்?
பாடல் ஆசிரியர்கள், யூடியூபர் கள், குறும்பட இயக்குநர்கள், விளம்பரத் தயாரிப்பாளர்கள், சமூக வலைத்தளவாசிகள், உள்ளடக்க உருவாக்குநர்கள் (Content Creators) போன்றோ ருக்கும் இசையார்வம் கொண்ட வர்களுக்கும் இந்தக் கருவி உதவியாக இருக்கும். பெரும் தொகையைச் செலவிடாமல், தங்கள் கற்பனையை உடனடியாகப் பாடலாக மாற்றிப் பார்க்க விரும்புவோருக்கு Suno ஒரு வரப்பிரசாதம். https://suno.com/
|மேலும் கற்கலாம்|
- கட்டுரையாளர், பேராசிரியர்