Published : 02 Jan 2023 04:57 PM
Last Updated : 02 Jan 2023 04:57 PM

‘டெக்னோ ஃபான்டம் எக்ஸ்2’ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

டெக்னோ Phantom X2 5ஜி ஸ்மார்ட்போன்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Phantom X2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் Phantom X2 5ஜி என்ற ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வரும் 9-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. இப்போதைக்கு இந்த போனை வாங்க விரும்பும் பயனர்கள் அதனை முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு அம்சங்கள்:

  • 6.8 இன்ச் கொண்ட திரை அளவு
  • AMOLED டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 9000 ப்ராசஸர்
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • டைப் சி சார்ஜிங் போர்ட்
  • 5,160mAh பேட்டரி
  • இந்த போனின் விலை ரூ.39,999

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x