Published : 11 Dec 2022 09:50 PM
Last Updated : 11 Dec 2022 09:50 PM

ட்விட்டர் சேவை பாதிப்பு; பயனர்கள் தவிப்பு?

கோப்புப்படம்

சென்னை: ட்விட்டர் சமூக வலைதள சேவைகள் முடங்கியதால் பயனர்களால் அந்த தளத்தின் சேவையை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முடங்கப்பட்ட தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் ‘டவுன்டிட்டக்டர்’ தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலி மற்றும் வலைதளம் என இரண்டிலும் பயனர்கள் இந்த முடக்கத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இரவு 7.16 மணி அளவில் ட்விட்டர் முடக்கம் குறித்த சுமார் 2700 புகார்கள் குவிந்துள்ளன. அதில் ட்விட்டர் செயலியை தங்களால் பயன்படுத்த முடியவில்லை என சுமார் 64 சதவீத பயனர்களும், வலைதளத்தில் அந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த முடியவில்லை என 34 சதவீதம் பயனர்களும் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாள் முதல் இப்போது வரையில் நாள்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் செய்திகளாகி வருகிறது. அதோடு இந்த தளத்தில் அவர் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ப்ளூ டிக் சந்தா. கட்டண அடிப்படையில் பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை மீண்டும் நாளை (டிசம்பர் 12) முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நிலையில்தான் ட்விட்டர் முடங்கிய தகவல் வெளியானது.

‘இது தெரியாமல் 7 முறை ட்விட்டர் செயலியை எனது போனில் அப்டேட் செய்து, பின்னர் அன் இன்ஸ்டால் செய்து விட்டேன்’, ‘ட்விட்டர் முடக்கத்தால் எனது ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என தெரிந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்’, ‘ட்விட்டர் முடங்கியது என அதில் ட்வீட் செய்து வருகிறோம்’ என பயனர்கள் #TwitterDown என டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது ட்விட்டர் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x