Published : 15 Sep 2022 11:10 PM
Last Updated : 15 Sep 2022 11:10 PM

இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ F21s புரோ சீரிஸ் | விலை & அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F21s புரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சீரிஸ் போன்களின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த செக்மென்ட் ஹேண்ட் செட்டில் மைக்ரோ லென்ஸ் கேமராவை கொண்டுள்ள ஒரே போன் இதுதான் எனவும் ஒப்போ தெரிவித்துள்ளது.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘F’ சீரிஸ் போன்களில் ஒன்றான F21s புரோ 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

F21s புரோ 5ஜி - சிறப்பு அம்சங்கள்

  • 6.43 இன்ச் திரை அளவு கொண்ட ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
  • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
  • டைப் சி சார்ஜிங் போர்ட்.
  • 5ஜி இணைப்பு வசதி.
  • 4500mAh பேட்டரி. 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • இந்த போனின் விலை ரூ.25,999.

F21s புரோ - சிறப்பு அம்சங்கள்

முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது கேமரா, சிப்செட், டிஸ்பிளே கிளாஸ் போன்றவை தான் இதில் மாற்றம் பெற்றுள்ளது. மற்றபடி அனைத்தும் அதே தான்.

  • 4ஜி இணைப்பு.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்.
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ. 22,999.

இந்த போன்களின் முன்பதிவும் தொடங்கியுள்ளதாக தகவல்.

— OPPO India (@OPPOIndia) September 15, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x