செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 19:24 pm

Updated : : 19 Aug 2019 19:24 pm

 

கோவை மாலில் ஜெப்ரானிக்ஸ் சில்லறைக் கடை

zebronics-opens-retail-store-at-coimbatore

ஐடி மற்றும் கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம், மொபைல் கருவிகள் மற்றும் கேமரா தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள ஜெப்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் கோயம்புத்தூரில் ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தனது முதல் பிரத்யேக ரீடெயில் கடையைத் தொடங்கியுள்ளது.

நடிகர் டேனியல் ஆன்னி போப் இந்தக் கடையை திறந்து வைத்தார். மேலும் அவர், “ஜெப்ரானிக்ஸ் தனது கடையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிராண்ட் இவ்வளவு காலமாக பல சமீபத்திய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அவர்கள் கடையில் உள்ள பலவகையான தயாரிப்புகளை மக்கள் நிச்சயம் பெரிதும் விரும்புவார்கள்!” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திறப்பு விழாவில், ஜீப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி பேசுகையில், “சென்னையில் தான் முதன் முதலில் ஜெப்ரானிக்ஸின் பயணம் தொடங்கியது, இதனால் தமிழ்நாட்டுக்கு என்றும் எங்கள் மனதில் தனி இடம் உண்டு, அங்கு தான் ஜெப்ரானிக்ஸ் ஒரு நிறுவனமாக தன் பயணத்தைத் தொடர்ந்தது.


கடையைத் திறந்து வைத்த டேனியல்

இதனால் கோவையில் எங்கள் பிரத்யேக கடையைத் திறப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பிராண்டாக, மக்களின் பிராண்டாக வளருவதற்கு உதவிய எங்களின் பரந்த தயாரிப்பு வகைகள் மூலம் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். உயர்ந்த தரமும் செயல்திறனும் உள்ள எங்கள் தயாரிப்புகள் பலதரப்பட்ட மக்களுக்கும் உதவக்கூடியவை” என்றார்.

மேலும் திரு தோஷி, “எங்களின் முக்கிய நோக்கம் பிரண்டு பற்றிய விழுப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்குவது, எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் ரீடெயில் கடைகளைத் திறக்க விரும்புகிறோம்”. என்று கூறினார்.


Zebronics retail storeஜெப்ரானிக்ஸ் கடைஜெப்ரானிக்ஸ் ஸ்டோர்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author