Published : 19 Aug 2016 12:25 PM
Last Updated : 14 Jun 2017 05:55 PM
இணையத்தில் வீடியோக்களைப் பார்க்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இவற்றில் ‘யூடியூப்' நன்கறியப்பட்டதாக இருக்கிறது. யூடியூப் தவிர ‘விமியோ' உள்ளிட்ட வீடியோப் பகிர்வுச் சேவைகளும் இருக்கின்றன.
யூடியூபில் எல்லா வகையான வீடியோக்களையும் பார்த்து ரசிக்கலாம் என்றாலும், இடையூறாகத் தோன்றும் விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். எனினும் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்க விரும்பினால் ‘சேஃப்ஷேர்.டிவி' இணையதளம் அதற்கு வழிகாட்டுகிறது.
யூடியூப் வீடியோவுக்கான இணைப்பை இந்தத் தளத்தில் சமர்பித்தால் அதில் உள்ள விளம்பரங்களை நீக்கிவிட்டு, இடையூறு இல்லாமல் பார்க்கக் கூடிய வடிவில் மாற்றித் தருகிறது. இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.
மேலும் அறிந்துகொள்ள இணைய முகவரி: >http://safeshare.tv/
Sign up to receive our newsletter in your inbox every day!