Last Updated : 04 Jan, 2018 06:15 PM

 

Published : 04 Jan 2018 06:15 PM
Last Updated : 04 Jan 2018 06:15 PM

ட்விட்டரை வெளியேற்றி கோல்டன் குளோப் விருது விழாவை நேரடியாக ஒளிபரப்பும் ஃபேஸ்புக்

 

இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை ஃபேஸ்புக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனம் கோல்டன் குளோப் விருது விழாவை நேரடியாக ஒளிபரப்பியது.

ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து பெரிய கவுரவமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள், ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் வழங்கப்படுகின்றன. அந்தந்த வருடத்தில் வந்த சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஹாலிவுட் வெளிநாடு பத்திரிகை கூட்டமைப்பு (HFPA) மற்றும் விழாத் தயாரிப்பாளர்களுடன் இதற்கான ஒப்பந்தத்தில் ஃபேஸ்புக் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ரெட் கார்ப்பெட்டில் இருந்து 360 டிகிரி வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு, ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பாகும்.

விருது வழங்கும் விழா ஜனவரி 7-ம் தேதி கோல்டன் குளோப் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இரண்டு மணிநேரத்துக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

அதேபோல பிரத்யேக ரெட் கார்ப்பெட் நிகழ்வுகளும் மேடைக்குப் பின்புறம் எடுக்கப்படும் காட்சிகளும் கோல்டன் குளோப் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒளிபரப்பு செய்யப்படும்.

ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் நிறுவனம் இடையிலான கேள்வி பதிலும் முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x