திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

“பாஜகவை எதிர்க்க முதுகெலும்புள்ள முதல்வர் வரவேண்டும்” - உதயநிதி பேச்சு

Published on

“பாஜக-வை எதிர்க்க வேண்டுமென்றால் முதுகெலும்பு உள்ள முதல்வர் வேண்டும். அதை பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியாது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். பின்னர், திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘‘திருப்பத்தூர் மாவட்டம் திமுக-வின் கோட்டை. திருப்பத்தூர் மட்டுமல்ல ஒட்டு மொத்த வடக்கு மண்டலமும் திமுக-வின் கோட்டை என்பதை நாம் பலமுறை நிருபித்துள்ளோம்.

இந்த தேர்தலில் மீண்டும் அதனை நிரூபிக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்ற பிறகு நாம் சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும், சொல்லாத பல திட்டங்களையும் நாம் செய்து காட்டி இருக்கிறோம். தமிழகத்தில் வீட்டுக்கு ஒருவராவது நமது திட்டங்களால் பலன்பெற்ற பயனாளியாக இருப்பார்கள்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மகளிரிடம் உள்ளது. இந்தியாவிலேயே 11.19 சதவீதம் வளர்ச்சி அடைந்து நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், நமது நிதி, கல்வி, மொழி உரிமைகளை பறிக்கின்றனர். மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்க நினைக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி திட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

புதிய கல்விகொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக்கூறிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். தற்போது, புதிய கல்வி திட்டத்தை ஏற்றுக்கொண்ட அரசுகளும், அதனை எதிர்க்க ஆரம்பித்துள்ளன. பாஜக-வால் தமிழகத்தில் நேரடியாக வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் பல்வேறு குறுக்கு வழிகளில் வெற்றிபெற முயற்சி செய்கின்றனர்.

நமது கட்சியில் 23 சார்பு அணிகள் உள்ளன. ஆனால் பாஜக-வுக்கு சிபிஐ, ஈடி, தேர்தல் ஆணையம் ஆகியவை சார்பு அணிகளாக உள்ளன. இவற்றை வைத்து மிரட்டி கட்டாய கூட்டணியாக அதிமுக கூட்டணியை அவர்கள் உருவாக்கி இருக்கின்றனர். தேர்தல் அறிவித்தால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்துவிடுவார். அதற்கு முன்பு எட்டிக்கூட பார்க்கமாட்டார். பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது பெரியார் புகைப்படமும், திருச்சிக்கு வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி படமும் எடுக்கப்பட்டது. அவ்வளவு மோசமான நிலைமையில் அதிமுக உள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு அதிமுக-வை பாஜக முழுமையாக விழுங்கிவிடும். பிஹாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே ஓரங்கட்டிவிட்டு அங்கு ஆட்சியை கைப்பற்றிவிட்டது பாஜக. அப்படி இருக்கையில், ஊர்ந்துபோய் காலை பிடித்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்.

பாஜக-வை எதிர்க்க வேண்டுமென்றால் முதுகெலும்பு உள்ள முதல்வர் வேண்டும். அதை பழனிசாமியிடம் எதிர்பார்க்க முடியாது. பாஜக-வை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். மோடிக்கு ஏற்ற அடிமையாக பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது தான் நமது வேலை. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தினசரி 50 முதல் 60 பேரை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னால் 50 முதல் 60 பேர் திமுக-வுக்கு வாக்களிக்கும் நிலையில் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் நமது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் 30 நாட்களில் தேர்தல் வந்து விடும். சிங்கிள் டீயை குடித்துவிட்டு இரவு, பகல் பாராமல் தேர்தல் வேலையை பார்த்தவன் திமுக-காரன் என்பதை நாம் மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். தேர்தல் என்னும் போரில் திட்டங்கள் வகுத்து நாம் செயல்பட்டால் நிச்சயம் 200 தொகுதிகள் இல்லை... 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்” என்றார்.

<div class="paragraphs"><p>திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.</p></div>
கரூர் நெரிசல் வழக்கு: டெல்லி சென்றார் விஜய்; சிபிஐ முன்பு இன்று ஆஜர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in