“திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டி இல்லை!” - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on
1 min read

திருச்சி: “திருச்சி இடைத்தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தவெகவுக்கு எந்த அழுத்தத்தையும் நாங்கள் தரவில்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது ஆரோக்கியமானது அல்ல; எந்த பின்னணியில் இதனைச் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என இதனை கடந்து செல்ல முடியவில்லை. இடைத்தேர்தலில் (திருச்சி கிழக்கு) நான் போட்டியிடப் போவதில்லை. தவெகவுக்கு எந்த அழுத்தத்தையும் நாங்கள் தரவில்லை.

அமைச்சரின் துறைகலை மாற்றித் தரவோ அல்லது திருச்சி கிழக்கில் போட்டியிடவோ சீட் கேட்கவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு ஊகங்களை பரப்புகின்றன. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியிருக்கிறோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேற்று என்னை சந்தித்தனர். நாளை நடைபெற உள்ள நிகழ்வில் ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களிடமும் முதல்வர் விஜய் பேசுவார் என சொல்லப்பட்டது. அமைச்சர் சரத் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்மையென்றால் நடவடிக்க எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன் </p></div>
“வண்ணக் குறியீடு மூலம் அரசு வேலையை விலை பேசுகிறதா விஜய் அரசு?” - வானதி சீனிவாசன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in