

சென்னை: வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை எளிதாகத் தெரிந்துகொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது பல்வேறு டிஜிட்டல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டு கிடைக்காதவர்கள் அல்லது வெளியூர்களில் இருப்பவர்கள் பல்வேறு முறைகளில் தங்கள் விவரங்களைப் பெறலாம்.
இணையதளம் மூலமாக அறிய தேர்தல் ஆணைய இணையதள முகவரிக்குச் சென்று, உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி அல்லது மொபைல் எண் அடிப்படையில் தேடலாம்.
மொபைல் ஆப் மூலமாகவும் வாக்காளர் உதவி எண் செயலி மூலமும் விவரங்களை அறியலாம். கட்டணமில்லாத 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
இணையதளத்தில் உங்களின் பெயர், உறவினர் பெயர், வயது, மாவட்டம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்தும் உங்களின் வாக்குச்சாவடி விவரங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளர்கள் சில முக்கிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு, தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.