தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: தலைமைச் செயல​கத்​தில் உள்ள முதல்​வர் தனிப்​பிரி​வில் பொது​மக்​கள் தின​மும் தங்​கள் கோரிக்கை மனுக்​கள் மற்​றும் புகார்​களை வழங்கி வரு​கின்​றனர்.

இதனிடையே, கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைச் சேர்ந்த அஞ்​சலை​யம்​மாள் என்ற பெண் நேற்று முன்​தினம் முதல்​வர் தனிப்​பிரிவு அலு​வல​கத்​துக்கு மனு கொடுக்க வந்​த​போது, திடீரென மண்​ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீக்​குளிக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து காப்​பாற்​றிய சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

இதையடுத்து தலை​மைச் செயல​கத்​தில் போலீஸ் பாது​காப்பு நேற்று பலப்​படுத்​தப்​பட்​டது. குறிப்​பாக, முதல்​வர் தனிப்​பிரிவுக்கு மனு கொடுக்​கவரும் பொது​மக்​கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in