தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஒரு கோடிக்கு மேல் பணப் பரி​மாற்​றம் அம்​பலம்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் 40-க்​கும் மேற்​பட்ட தாலுகா (வட்​டாட்​சி​யர்) அலு​வல​கங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் நேற்று ஒரே நேரத்​தில் நடத்​திய சோதனை​யில், கணக்​கில் வராத ரொக்​கப் பணம் மற்​றும் ‘ஜி-பே’ மூலம் நடை​பெற்ற 1 கோடிக்கு மேல் பணப் பரி​மாற்​றங்​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​து.

பொது​மக்​களுக்கு பட்டா பெயர் மாற்​றம், சிட்​டா, அடங்​கல், வரு​மானம், இருப்​பிடம், சாதி உள்​ளிட்ட சான்​றிதழ்​கள் வழங்​குதல், நில அளவை, நில​வரி வசூல், அரசு நலத்​திட்​டங்​கள் செயல்​படுத்​துதல் போன்ற பணி​கள் தாலுகா அலு​வல​கங்​கள் மூலம் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்த சேவை​களுக்​காக சில அலு​வலர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் எழுந்​தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்​புத்​துறை ஐ.ஜி. மகேஸ்​வரி உத்​தர​வின்​பேரில், நேற்று மாலை 5 மணி முதல் மாநிலம் முழு​வதும் 40-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள், பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள தாலுகா அலு​வல​கங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை​யில் ஈடு​பட்​டன.

சென்​னை சோழிங்​கநல்​லூர் தாலு​கா அலு​வல​கத்​தில் நடந்த சோதனையில் ரூ.50 ஆயிரம் ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. மேலும் ‘ஜி-பே’ மூலம் ரூ.6 லட்​சம் வரை பணப் பரி​மாற்​றம் நடை​பெற்​றது கண்​டறியப்​பட்​டது. சென்னை மாநகரில் மட்​டும் 6-க்​கும் மேற்​பட்ட தாலுகா அலு​வல​கங்​களில் சோதனை நடை​பெற்​றது.

திரு​வள்​ளூர், திருச்சி கிழக்​கு, செந்​துறை, வேப்​பந்​தட்​டை, சீர்​காழி, திரு​வோணம், கரூர், புதுக்​கோட்​டை, திரு​வாரூர், சிதம்​பரம், மேல்​மலை​யனூர், சின்​ன​சேலம், கோவை வடக்​கு, உடுமலை, தலை​வாசல், கோபி, குமார​பாளை​யம், கிருஷ்ணகிரி மற்​றும் நல்​லம்​பள்ளி உள்​ளிட்ட பல்​வேறு தாலுகா அலு​வல​கங்​களி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது.

திருச்சி கிழக்கு தாலுகா அலு​வல​கத்​தில் ரூ.7 ஆயிரம் ரொக்​க​மும், ‘ஜி-பே’ மூலம் ரூ.12 லட்​சம் பெறப்​பட்​டதும் கண்​டறியப்​பட்​டது. பல இடங்​களில் இரவு 9 மணியை தாண்​டி​யும் சோதனை நீடித்​தது. டிஜிட்​டல் பணப் பரி​மாற்​றங்​கள் தொடர்​பாக​ லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். குறிப்​பாக ஜி-பே மூலம் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கைமாறிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in